அனுராதபுரம், சாலிய மாவத்தை பிரதேசத்தில் எரிவாயு முகவர் ஒருவருக்கு சொந்தமான களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 540 எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் தவிர, 54 வெற்று எரிவாயு சிலிண்டர்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இன்று (12) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பந்தப்பட்ட எரிவாயு முகவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
Be First to Comment