கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் கதிரையில் இருந்து கீழே விழுந்து ஒரு வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் குழந்தையை கதிரையில் இருத்தி விட்டு சமயலறையில் இருந்துள்ளனர். இந்த நிலையில், குழந்தை கதிரையிலிருந்து தவறி விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக குழந்தை, முழங்காவில் பிரதேச வைத்தியசாலைக்கு, கொண்டு செல்லப்பட்ட போது, வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Be First to Comment