தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியால், ரயில்களில் பயணிகள் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.
அலுவலக நேரங்களில் ஓடும் ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது, நடைபாதைகள் அனைத்தும் பயணிகளால் நிரம்பிக் காணப்படுகின்றன.
இதேவேளை பேருந்து சேவைகள் 90 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் பஸ் சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடையலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Be First to Comment