நெடுந்தீவு மக்களுக்கு மேலதிக வருமானத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுந்தீவின் கரையோரப் பிரதேசங்களில் சேருகின்ற கடல்பாசிகளை சேகரித்து ஏற்றமதி செய்வதற்கான அனுமதியைப் பெற்றுத்தருமாறு, நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளினால் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து தேவையான அனுமதிகளை வழங்குமாறு தெரிவித்தார்.
இதன்மூலம் நெடுந்தீவில் வாழ்ந்து வருகின்ற சுமார் 300 குடும்பங்களுக்கு மாதந்தோறும் சுமார் 50,000 ரூபாய் மேலதிக வருமானம் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment