பாணந்துறை – வேகட பகுதியில் எரிபொருள் வரிசையில் நின்ற நபரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 53 வயதான முச்சக்கரவண்டி சாரதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது மகனுடன் எரிபொருள் வரிசையில் காத்திருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளது.
இதேவேளை, பூகொட பகுதியில் எரிவாயு வரிசை அருகில் ஒருவர் உயிரிந்துள்ளார். 64 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
Be First to Comment