சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின்மூலம், தற்போது நாளொன்றுக்கு 350 மெற்றிக் டன் லீற்றர் பெற்றோல் உற்பத்தி செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் சுத்திகரிப்பின் மூலம் நாளொன்றுக்கு 600 மெற்றிக் டன் டீசல் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளும் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதேநேரம், நாட்டை வந்தடைந்துள்ள 40,000 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலில் உள்ள டீசலின் தரப்பரிசோதனை முடிவடைந்த பின்னர், இன்று மாலை முதல் அதனை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment