யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் தாதி ஒருவருக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடையவர் அதே வைத்தியசாலையில் பணியாற்றும் ஆண் தாதியே என அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 8ம் திகதி பெண் தாதி ஒருவர் இரவு கடமையில் இருந்த நிலையில் நள்ளிரவு வேளையில் தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் தாதி சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை அத்தியட்சகருக்கு முறைப்பாடு வழங்கியதுடன், சாவகச்சோி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு வழங்கியிருந்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய புலன் விசாரணையில் கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர் அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் ஆண் தாதி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர். அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக நிர்வாக மட்டத்திலான விசாரணை நடத்துமாறும்,
அதன் அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்கும்படியும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வைத்தியசாலை அத்தியட்சகரை பணித்திருக்கின்றார்.
Be First to Comment