குருணாகல் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வௌகம பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
வெயாங்கொடை, பிலியந்தல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 34, 36 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தனியார் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் இருவர் ஈடுபட்டு இருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Be First to Comment