எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நிற்கும் நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மாத்திரமே எரிபொருளை வழங்க முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (16) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒரு லோட் எரிபொருள் என்பது 6,600 லீற்றர்களாகும். முன்னர் அறிவிக்கப்பட்ட எரிபொருள் விநியோக கட்டுப்பாட்டிற்கு அமைய ஒரு லோட் மூலம் 220 வாகனங்களுக்கு மாத்திரமே எரிபொருளை பெற்றுக் கொடுக்க முடியும். எனினும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன.
“தயவுசெய்து இது தொடர்பில் அறிந்து கொள்ளுங்கள். எரிபொருள் பவுசர்களை ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மீண்டும் மீண்டும் அனுப்ப முடியாது.”
“எனவே அடுத்த திட்டமிடப்பட்ட திகதியில்தான் குறித்த எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருளை அனுப்ப முடியும்.
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் குழப்பநிலை ஏதும் ஏற்பட்டால், அன்றைய தினத்தில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளை பெற்றுக் கொடுக்க முடியாது போகும். வருத்தத்துடன் அதனை இங்கு கூற வேண்டியுள்ளது.
“எரிபொருள் கிடைக்காததற்கு எரிபொருள் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காரணமல்ல!!
Be First to Comment