யாழ்.பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்களை மோதி தள்ளிய ஹயஸ் வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றது.
குறித்த சம்பவம் மாட்டின் வீதிக்கு அண்மையில் நேற்றய தினம் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண்களை மிகை வேகத்தில் வந்த ஹயஸ் வாகனம் மோதி தள்ளியதுடன்,
உடனேயே அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றது. இதனையடுத்து காயமடைந்த பெண்களை பொதுமக்கள் மீட்டதுடன்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதேவேளை விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில்
விபத்தை ஏற்படுத்திய ஹயஸ் வாகனத்தின் இலக்க தகடு சிக்கியுள்ளதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
Be First to Comment