மோட்டார் சைக்களில் விபத்தில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியழகன் எப்போதும் நல்ல மனநிலையில் இருந்துள்ளார்
விபத்தை அடுத்து உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“மிகவும் சோகத்துடன், எங்கள் உறுப்பினர்களில் ஒருவர் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்பதை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்” என்று ஒட்டாவா காவல்துறை புதன்கிழமை காலை ட்வீட் செய்துள்ளது.
Be First to Comment