Press "Enter" to skip to content

நளினி – ரவிச்சந்திரனை விடுதலை செய்யக்கோரிய மனுக்கள் நிராகரிப்பு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை சென்னை மேல்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை மேல்நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர்.

தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் தமிழக அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் தங்களை விடுவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று சென்னை மேல்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையில் ஆராயப்பட்டது.

உயர்நீதிமன்றத்தைப் போல அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவிக்கும் அதிகாரம் சென்னை மேல்நீதிமன்றத்திற்கு இல்லை என்று கூறி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி நிராகரித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *