பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணாமல், நெருக்கடி நிலை பற்றி மக்களுக்கு தெரிவிக்கும் ஊடகப் பேச்சாளராக செயற்படுவதாகவே தெரிகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் பல பரிந்துரைகளை நாங்கள் செய்துள்ளோம். இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க உதவும் முக்கிய ஆலோசனைகளையும் பிரதமரிடம் முன்வைத்துள்ளோம். இந்த நெருக்கடி நீடித்தால் வாழ்க்கை எளிதாக இருக்காது. உண்மை என்னவென்றால், பிரதமர் இப்போதுதான் ஊடகப் பேச்சாளராக இருக்கிறார், தீர்வுகளை அமுல்படுத்துவத்தை விடுத்து நெருக்கடி பற்றி பலமுறை பேசுகிறார்” என்று அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார் .
நாட்டில் ஜனநாயகம் பேணப்படவேண்டுமாக இருந்தால், மோசடி மற்றும் அநீதி நிறுத்தப்பட வேண்டும் என்றால், 21 வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவது இன்றியமையாதது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .
Be First to Comment