தாம் உட்பட அனைத்து அரிசி உற்பத்தியாளர்களும் நாளை (19) முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு அரிசியை வெளியிட வேண்டும் என அரலிய அரிசி கூட்டுத்தாபனத்தின் பிரதானி டட்லி சிறிசேன தெரிவித்தார்.
அதனடிப்படையில் எத்தகைய பிரச்சினை இருந்தாலும் நாளை முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் அரிசியை சந்தைக்கு விடுவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய அரிசி வியாபாரிகளும் இதே விலையில் அரிசியை வழங்க வேண்டும் என அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
Be First to Comment