இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தருணத்தில் இலங்கைக்கான தனது ஆதரவை சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பிறந்தநாளிற்கான( ஜூலை20) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர் இறப்பர் அரிசி உடன்படிக்கை தன்னிறைவு ஐக்கியம் பரஸ்பர உதவி ஆகியவற்றினை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு கடிதமொன்றறை அனுப்பிவைத்துள்ளதுடன் தற்போதைய சூழ்நிலையில் இறப்பர் அரிசி உடன்படிக்கை தன்னிறைவு ஐக்கியம் பரஸ்பர உதவி ஆகியவற்றின் உணர்வினை வலியுறுத்தினார்என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனா இலங்கைக்கு எப்போதும் உதவ தயார் எனவும் ஜி குறிப்பிட்டார் என தூதரகம் தெரிவித்துள்ளது.
Be First to Comment