யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் எவ்வித கொடுப்பனவும் இல்லாமல் பணியாற்றுவது தொடர்பில் எடுத்துக்காட்டும் விசேட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்விலேயே இந்த விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நாட்டில் காணப்படும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் உள்ளூராட்சி சபையின் உறுப்பினர்களுக்கு கொடுப்பனவு வழங்காததால் சபையை கலைக்கப்படுகின்ற சூழல் ஏற்படுமானால் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் எவ்வித கொடுப்பனவுமில்லாமல் பணியாற்றுவது என எடுத்துக்காட்டும் வகையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.
யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணைக்கு இரண்டு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Be First to Comment