இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இலங்கைக்கு உதவுவது குறித்து இந்தியா ஆராய்கிறது.
நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இது குறித்து ஆராயப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள வெவ்வேறு பிரச்சினைகள் மற்றும் அதற்கு இந்தியாவினால் வழங்கக் கூடிய ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான நிலையில் அண்டைய நாடான இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு ஒருமித்த ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment