Press "Enter" to skip to content

சாவகச்சேரி வர்த்தகருக்கு குவியும் வாழ்த்துகள்!

இலங்கையில் தற்போது நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் தினமும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

நாட்டில் கடந்த சில மாதங்களாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்பால் குடும்பஸ்தர்கள் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

 

யாழில் இப்படியும் சில மனிதர்களா! வர்த்தகருக்கு குவியும் வாழ்த்துகள்!

இந்த நிலையில் யாழ். சாவகச்சேரிப் பகுதியில் இருக்கும் வர்த்தக நிலையத்திற்கு முன்னால் சிறு கொள்கலனில் அரிசியை காட்சிப்படுத்தி இன்றைய உணவுக்கு அரிசி இல்லாமல் வருந்தும் உறவுகள் இதிலிருந்து எடுத்துச் செல்லலாம் என அறிவித்தலை காட்சிப்படுத்தியுள்ளார்.

தற்போதைய சூழலை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் ஒரு சில வர்த்தகர்கள் தமது விருப்பத்திற்கேற்றவாறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்து வரும் நிலையில் அரிசி இல்லாமல் இருப்பவர்களுக்கு அரிசி வழங்க இவர் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் அனைவரும் குறித்த வர்த்தகருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *