ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகைளில் நாளை மாலை 5 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதுடன், உத்தேச 21 ஆம் திருத்தச் சட்டமூலம் குறித்தும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Be First to Comment