மன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் சுமார் 26 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண் மன்னாரை சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக அவர் மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Be First to Comment