நாளை (20) முதல் நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் குறித்து இன்று (19) அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளாந்த மின் உற்பத்தி மற்றும் நிலவும் தேவையை கருத்திற் கொண்டு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சாரம் தடைப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கல்வி நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக நடத்துவதற்கு பாடசாலைகள் திட்டமிட்டுள்ளதால், பகலில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக பொது பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Be First to Comment