எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இரண்டு எரிபொருள் இறக்குமதிகள் வருகை தந்ததன் பின்னர் தற்போதைய எரிபொருள் வரிசைகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறையும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அடுத்த பெற்றோல் இறக்குமதி வியாழன் அன்று நாட்டிற்கு வரும் எனவும், வெள்ளிக்கிழமை டீசல் ஏற்றுமதி எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் இருப்புக்களை இறக்கி விநியோகிக்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும்.
எனவே இந்த வார இறுதிக்குள் எரிபொருள் வரிசைகள் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் வரிசையை குறைப்பதற்கான புதிய பொறிமுறையையும் எரிசக்தி அமைச்சர் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய வேலைத்திட்டத்தின் பிரகாரம் அத்தியாவசிய சேவைகள், கைத்தொழில்கள், விவசாய சமூகம், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய பொதுப் போக்குவரத்து வாகனங்களில் எரிபொருள் விநியோகம் செய்யும் போது முன்னுரிமை வழங்கப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.
டீசல் மற்றும் பெற்றோலை பதுக்கி வைப்பதும் தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு பங்களித்துள்ளது.
சில பிரிவினர் தொடர்ந்து அதிகளவில் எரிபொருளை சேகரித்து அதன் மூலம் பற்றாக்குறையை உருவாக்கி வருவதாக ஊடக அறிக்கைகள் மூலம் தெரிய வருகிறது.
எனவே தொடர்ச்சியாக எரிபொருளை பதுக்கி வைக்கும் நபர்களை சுற்றிவளைத்து கைது செய்வது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நாட்டில் எரிபொருள் வரிசைகள் வார இறுதியில் இருந்து குறையும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Be First to Comment