அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைத்து அரசியல் இலாபம் ஈட்டுவதில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு எந்தவொரு பிரிவினரும் பதில்களை முன்வைக்க முடியுமென்றால், அவர்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தை சீர்குலைத்து அதன் அரசியல் இலக்குகளை அடையவே எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன.
இது அரசியல் விளையாடுவதற்கான நேரம் அல்ல, கூட்டாகச் செயற்பட்டு பிரச்சினைகளுக்குப் பதில் தேட வேண்டிய நேரம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment