வாகனங்களுக்கான குத்தகை பணத்தை செலுத்திக்கொள்ள முடியாது வாகன உரிமையாளர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் எனவே எரிபொருள் பிரச்சினை தீரும் வரை அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சியானது ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிவிட்டு சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளது.
எவ்வாறாயினும் நான் இந்த சந்தர்ப்பத்தில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment