Press "Enter" to skip to content

எரிபொருள் வரிசையில் அரசியலா? -மஹிந்த அமரவீர

எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்டிய பகுதிகளிலும், எரிபொருள் வரிசைகளிலும் அமைதியின்மையை ஏற்படுத்துவதில் அரசியல் தொடர்புள்ளவர்கள் மற்றும் பாதாள உலகப் பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை கொள்வனவு செய்யக் காத்திருக்கிறோம் என்ற போலிக் காரணத்தின் கீழ் அமைதியின்மையை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற அமைதியின்மையைத் தணிக்கவும், கும்பலைக் கைது செய்யவும் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படும்போது, ​​சில நபர்கள் வன்முறையைத் தூண்டுவதற்காக சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸாரும் இலங்கையர்களே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடுமையான எரிசக்தி நெருக்கடிக்கு ஒரே இரவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.

அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக போதிய எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு இரத்தினங்கள், லிமோனைட், டைட்டானியம் மற்றும் பிற கனிமங்கள் ஏற்றுமதி மூலம் ஆண்டு வருமானம் வெறும் 44 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் ஓர் எரிபொருள் கப்பலுக்கு செலுத்துவதற்கு அரசாங்கத்திற்கு 52 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *