நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் சகோதரர், காணி விவகாரம் ஒன்று தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காணி ஒன்று தொடர்பில் 15 இலட்சம் ரூபாவை கையூட்டலாகபெற முயற்சித்த குற்றச்சாட்டில், மட்டக்களப்பில் வைத்து நாடாளுமன்ற உறப்பினர் வியாழேந்திரனின் சகோதரர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், இதன்போது உத்தியோகத்தர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்
Be First to Comment