ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தலைமையிலான பெண்கள் குழுவினரே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தாய்மாரின் போராட்டம் என்ற கருப்பொருளில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எனவே, கொழும்பு – கோட்டை மாவத்த வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கி பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்
Be First to Comment