இந்நிலையில் கடந்த சில நாட்களாகியும் எரிபொருள் விநியோகிக்கப்படாமையினால் குழப்பமடைந்த மக்கள் என்று எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாங்கிகளை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரின் தலைமையில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த உத்தியோகத்தர்கள்
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாங்கிகளை சோதனைக்கு உட்படுத்தியவேளை 1150லீற்றர் பெட்ரோல் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அத்தியாவசிய இருப்பான 300 லீற்றரை கையிருப்பில் வைத்துக் கொண்டு ஏனைய 850 லீற்றரை விநியோகம் செய்வதற்கு பணிக்கப்பட்டது.
இதன் பிறகு முச்சக்கர வண்டிகளுக்கும் கார்களுக்கும் ஆயிரம் ரூபாய் வீதமும் மேலும் மோட்டார் சைக்கிள்களுக்கு 500 ரூபாய் வீதமும் எரிபொருள் வழங்கப்பட்டது.
மேலும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிசாரின் பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Be First to Comment