தம்மிக்க பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது, அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் ஐந்து அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறித்த மனுக்கள் இன்று அழைக்கப்பட்டபோது, அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாதிருப்பதற்கு நீதியரசர் ஆயத்தின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்மானித்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த ஐந்து அடிப்படை உரிமை மனுக்களும் உயர்நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டன.
தாம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுப்பதா? இல்லையா என்பதை உயர்நீதிமன்றம் முடிவு செய்யும்வரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்கபோவதில்லை என தம்மிக பெரேரா நேற்றைய தினம் உயர்நீதிமன்றிற்கு அறியப்படுத்தியிருந்தார்.
Be First to Comment