கொழும்பு – மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் நெதர்லாந்திலிருந்து கிடைக்கபெற்ற பொதியொன்றிலிருந்து பெருந்தொகையான போதைமாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி பொதியை பெற்றுக்கொள்வதற்கு எவரும் வந்திராத காரணத்தினால் அது இன்றைய தினம் தபால் திணைக்கள ஊழியர்கள், இலங்கை சுங்க போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரின் முன்னிலையில் சோதனையிடப்பட்டது.
அதன்போது, அப்பொதியில் படுக்கை விரிப்புகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டிருந்தன.
குறித்த பொதியிலிருந்து 13,640 மெதம்பிடமைன் அல்லது எக்ஸ்டசி எனப்படும் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.
இவற்றின் பெறுமதி 13 கோடியே 64 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீட்கப்பட்ட போதை மாத்திரைகள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Be First to Comment