மட்டக்களப்பு – வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட தௌலானை பகுதியில் மின்னல் தாக்கி 30 மாடுகள் ஒரே தடவையில் உயிரிழந்துள்ளன.
மட்டக்களப்பு-அம்பாறை எல்லைப்பகுதியான தௌலானை மேய்ச்சல் தரை பகுதியில்மரங்களின் கீழ் நின்ற 30 மாடுகளே இவ்வாறு நேற்று மாலை மின்னல் தாக்கி உயிரிழந்தன.
இரண்டு கால் நடை பண்ணையாளர்களின் மாடுகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன.
இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கால்நடை திணைக்களம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Be First to Comment