இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாமினர் எதிர்வரும் நாட்களில் பல சந்திப்புக்களை நடத்தவுள்ளனர்.
அந்த வகையில் குறித்த பணிக்குழாமினர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர்.
இந்த குழாமினர் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது நாட்டின் தற்போதைய நிலவரங்கள், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
Be First to Comment