கைத்தொழில் துறையில் உள்ளவர்களுக்கு கடன் மற்றும் வட்டிக் கட்டணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை ஜூன் 30ஆம் திகதி முதல் முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் துறை பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் துறைகளின் உயிர்வாழ்வை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தடைக்காலம் தொடரப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் அரசாங்கம் இன்று வரை தீர்மானம் எடுக்கத் தவறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மனிதாபிமானத்துடன் இந்த விவகாரத்தை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எரிவாயு, எரிபொருள் மற்றும் பால்மா தட்டுப்பாடுகளுக்கு இன்னும் தீர்வுகள் வழங்கப்படவில்லை எனவும், சுற்றுலாத்துறை, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி கைத்தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பு திருத்தங்களை அறிமுகப்படுத்துவது என்ற போர்வையில் அரசாங்கம் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
நாட்டில் அரசியல் சூதாட்டம் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Be First to Comment