அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் புதிய தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டவுடன், பொருத்தமான 225 பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்திற்கு பொருத்தமான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பொறுப்பும் அதிகாரமும் குடிமக்களிடம் உள்ளது.
நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஒன்றுபட வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட மக்களிடம் இருந்து வலுவான வேண்டுகோளையும் அர்ப்பணிப்பையும் உணர்ந்தால் மாத்திரமே உலகம் இலங்கைக்கு உதவும்.
இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை அரசியல்வாதிகளும் ஒட்டுமொத்த மக்களும் உலகுக்குக் காட்ட வேண்டும் என பிரதமர் இதன் போது தெரிவித்தார்.
எனவே நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு பல்வேறு நாசகார செயல்களில் ஈடுபடாமல் அனைத்து தரப்பினரையும் ஆதரவளிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.
Be First to Comment