Press "Enter" to skip to content

247 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு பெரும் போகத்திற்கான எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை!

இவ்வாண்டு பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 247 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையான வசதிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த பெரும் போகத்தில் அனைத்து நெற்பயிர்களிலும் விவசாயம் செய்வதற்கு விவசாய சமூகத்தை ஊக்குவிக்கும் பொறுப்பை விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் ஏற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்த பெரும் போகத்தில் நாட்டிலுள்ள அனைத்து நெற்செய்கைகளையும் மேற்கொள்வதே தமது இலக்கு என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published.