இன்று நள்ளிரவில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை 400 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அது 500 ரூபாவைத் தாண்டவுள்ளதாக கட்சியின் பிரதம செயலாளரான டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் குறிப்பாக பிரதமர் மீது பொதுமக்களின் கோபமும் வெறுப்பும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நியமனத்தின் பின்னர் காணப்பட்ட மிக நீண்ட எரிபொருள் வரிசையில் மக்களின் பிரச்சினைகள் மோசமடைந்துள்ளதாகவும், அதற்கான தீர்வு எங்கும் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ராஜபக்சக்களை பாதுகாப்பதிலும் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதிலும் கவனம் செலுத்தும் அதேவேளை, பிரதமரின் நியமனம் நாட்டின் பிரச்சினைகளை மோசமாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்கள் குற்றவாளிகள் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வதன் மூலம் பொது மக்களின் கருத்தை அடக்க முடியாது.
கைது செய்யப்பட்டுள்ள அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment