இலங்கையில் உள்ள பல வணிக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
தற்போதைய நிலையில் பல வணிக வங்கிகள் தமது கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதத்தை 30% ஆக அதிகரித்துள்ளன.
கடன் அட்டைகளுக்கான அதிகபட்ச வட்டி வீத வரம்பை நீக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி தீர்மானித்தது.
இந்த தீர்மானத்தை தொடர்ந்து, கடன் அட்டை வட்டி விகிதம் 18%லிருந்து 24% ஆகவும், தற்போது 30% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் நாட்டில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,973,481 ஆகும்.
Be First to Comment