எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தாங்கிகளை திறப்பதில் தலையிடுவதை தவிர்க்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸாருக்கும் அறிவித்துள்ளது.
எரிபொருள் தாங்கிகளை திறக்குமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள பொலிஸாரிடம் கோருவதை தவிர்க்குமாறும் பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய முயற்சிகள் ஆபத்தானவை என்றும் பாதுகாப்புக் கவலைகளை எழுப்புவதாகவும் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
எரிபொருள் தாங்கிகளை திறப்பது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பல்ல என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment