Press "Enter" to skip to content

மாணவ – மாணவியரை காதல் வலையில் வீழ்த்தி தன் காம இச்சையை தீர்த்த ஆசிரியர்..! விசாரணையில் அடுத்தடுத்து வெளியான பெற்றோரை பதறவைக்கும் கதைகள், முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் பாடசாலை மாணிகளை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துவந்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவரையும், மாணவன் ஒருவரையும் எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், மேலும் 5 மாணவர்களை பிணையில் விடுதலை செய்துள்ளது.

குறித்த சம்வம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தராக நியமனம் செய்யப்பட்ட நபர் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றும் நிலையில், குறித்த நபர் மாணவர்களை பயன்படுத்தி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்துவதுடன்,

அவர்கள் அந்தரங்கமாக இருப்பதற்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதுடன் அந்தரங்க புகைப்படங்களை பெற்று பின்னர் மாணவிகளை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் சில கசிந்த நிலையில் மாவட்டத்திலுள்ள இளைஞர்கள் சிலர் இணைந்து மாணவர்கள் சிலரை பிடித்து

அவர்களிடமிருந்த கையடக்க தொலைபேசிகளை சோதனையிட்டபோது அதில் மாணவிகள் சிலருடைய அந்தரங்க புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் காணப்பட்டிருக்கின்றது. மேலும் அத்தகைய புகைப்படங்கள், வீடியோக்கள் ஆசிரியருடனும் பகிரப்பட்டமை அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து இளைஞர்கள் இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தொியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து உஷாரடைந்த பொலிஸார் பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலரை அடையாளம் கண்டு அவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்திருக்கின்றனர். பின்னர் இரகசியமாக தொடர்ந்தும விசாரணைகளை முன்னெடுத்து 6 மாணவர்களை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகியிருக்கின்றார்.

பின்னர் பொலிஸார் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களையும் நேற்றய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து சட்டத்தரணி ஊடாக குறித்த ஆசிரியர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது ஆசிரியர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்தார்.

ஆசிரியருக்கு பிணை வழங்க பொலிஸார் கடும் ஆட்சேபணை தெரிவித்தனர். அத்துடன் ஆசிரியரிடம் தாம் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் , சான்று பொருட்கள் சிலவற்றை பெற வேண்டிய நிலைமை உள்ளமையால் அவருக்கு பிணை வழங்கும் பட்சத்தில் , தமது விசாரணைக்கு இடையூறுகள் ஏற்படும் என பொலிஸார் மன்றில் தெரிவித்ததுடன்,

பிணைக்கு ஆட்சேபனை தெரிவித்தனர். அதனை அடுத்து ஆசிரியரையும் மாணவன் ஒருவனையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், ஏனைய 5 மாணவர்களுக்கு பிணை வழங்கி வழக்கை 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதேவேளை இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரிடமிருந்து மற்றொரு தொலைபேசியை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் உள்ளக தகவல்கள் தொிவிக்கின்றன.

அதேபோல் குறித்த ஆசிரியர் மாணவிகளுடன் மட்டும் நின்றுவிடாது மாணவிகளின் உறவினர்கள் மீதும் கைவைக்க முயற்சித்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொிவிக்கின்றன.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *