நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் வாரத்தில் அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்குவிடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த வாரத்தைப் போன்று இந்த வாரமும் பாடசாலைகளை நடத்துமாறு அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை ஆரம்பமாகவுள்ள வாரத்தில் கொழும்பு நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதுடன், முக்கிய நகரங்களிலும் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த பாடசாலைகளில் தமது கற்கைகளை இணையவழியில் மேற்கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Be First to Comment