எரிபொருள் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் நடத்துவதற்காக அமைச்சர்கள் இருவர் ரஷ்யாவிற்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரண்டு அமைச்சர்களும் நாளை (27) ரஷ்யா செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இலங்கை எரிபொருள் பெற மறுப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மற்றுமொரு இராஜதந்திர விவகாரத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்வதாகவும் இதன்போது இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Be First to Comment