வலி,வடக்கு – கொல்லங்கலட்டி பகுதியில் தனிமையில் வாழ்ந்த 78 வயதான மூதாட்டி கடந்த வெள்ளிக்கிழமை கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில்,
மூதாட்டி வன்புணர்வுக்கு பின்பே கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டியின் சடலம் கடந்த வெள்ளிக்கிழமை அவருடைய வீட்டிலிருந்து மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திசாலையில் உடற்கூற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் முதாட்டி வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாதபோதும், ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மிக விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
Be First to Comment