சந்தேக நபரான கணவர் தனது மனைவியை பொல்லால் தாக்கிவிட்டு கடந்த 26 ஆம் திகதி காலை நுவரெலியா பொலிஸில் சரணடைந் துள்ளதாக நுவரெலியா பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார்.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபென்ட் தோட்டத்தின் மேல் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சத்தியவாணி (வயது 26)என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று(25) சனிக்கிழமை கணவன் மது அருந்திய நிலையில் இரவு உணவு கொண்டு வருமாறு மனைவியிடம் கூறியுள்ள நிலையில் வாக்குவாதம் முற்றி மனைவி கணவனை முதலில் தாக்கியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த கணவன் பொல்லால் அவரைத் தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த இரு பிள்ளைகளின் தாயாருக்கு 7 மற்றும் 3 வயதுடைய இரண்டு மகள்கள் உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை (35) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
Be First to Comment