எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி நாட்டிற்கு வரவிருந்த கப்பலே இவ்வாறு தாமதமாகியுள்ளது.
எனினும், உரத்தை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கமர்ஷல் உர நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
ஓமனிலிருந்து நாட்டிற்கு வருகைதரவுள்ள குறித்த கப்பலில் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரம் உள்ளதாக அவர் கூறினார்.
இந்திய கடனுதவியின் கீழ் இந்த உரம் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக கமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று தரப்பினரூடாக உரத்தின் தரம் ஆய்விற்குட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Be First to Comment