கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்த பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள், எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் ஏற்பட்டுள்ள திடீர் வீழ்ச்சி போன்றவற்றினால் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும், அதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
Be First to Comment