கொவிட் வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டினுள் புதிய வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் BA 5 என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸை மிகுந்த அவதானத்துடன் பரிசோதித்து வருவதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் இந்த புதிய வைரஸ் 63 நாடுகளில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் ஏனைய வைரஸ்களை விட வேகமாகப் பரவுகிறது என்றும், முந்தைய கொவிட் 19 வைரஸின் திரிபுகளை விட அதிகமாகப் பரவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தென்னாப்பிரிக்காவில் கொவிட் வைரஸின் புதிய வகையும் கண்டறியப்பட்டுள்ளது. இது B.1.1.529 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் வேகமாக பரவி நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உலக சுகாதார விஞ்ஞானிகள் இன்னும் வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் BA 5 வைரஸ் புதியதொரு திரிபாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment