அக்குரஸ்ஸ- திப்பட்டுவாவ பிரதேச வீடொன்றில் ஆண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது தலை நில்வலா கங்கையில் வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி மற்றும் மகளும் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 69 வயதான நபரே கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக காணப்பட்ட தனிப்பட்ட தகராறே இக்கொலைக்கான காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதேசத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பெண்ணும் 29 வயதுடைய இளைஞர் ஒருவருமே இக்கொலையுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்





Be First to Comment