மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், டுவிட்டர் செய்திகள் மூலம் மன்னிப்பு கேட்காமல் உடனடியாக பதவி விலகுமாறும், அவ்வாறு பதவி விலகும் பட்சத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நாட்டைக் பெறுப்பேற்பதாகவும், கோடிக்கணக்கான மக்களின் ஜனநாயகக் அபிப்பிராயத்தின் படி, அடுத்த ஐந்தாண்டு காலத்திற்குள் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு நிச்சயம் கட்டியெழுப்புவதாகவும், மோசடி அல்லது ஊழலுக்கு இங்கு இடமிருக்காது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (27) தெரிவித்தார்.
ஒரு சூப்பர் பிரதமரைக் கொண்டு வந்து நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் நடத்திய பொய் நாடகங்கள் அனைத்தும் தற்போது மக்களிடம் அம்பலமாகியுள்ளதாகவும், இவ்வாறானதொரு நிலை இருந்தும் அவ்அப்போதைய நேரத்தை சமாளிக்க பொய்களை கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று எரிவாயு,எரிபொருள், பால் மா கேட்டு போலி நாடகத்தை ஆரம்பித்துள்ளார் எனவும், இவ்வாறான பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதை நிறுத்துமாறும் கோரிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கோப் குழுவில் முறையற்ற அழுத்தம் பிரயோகித்தவர்களை அம்பலப்படுத்துவது கோப் குழுத்தலைவரின் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேபோல்,5 மாதங்களில்,10 மாதங்களில் நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனக் கூறும் போலியான ஏமாற்று நூல் சாஸ்திரத்திர விளையாட்டை நிறுத்தி, நாடு இழந்த நன்மதிப்பை மீட்டெடுக்க மக்கள் அபிப்பிராயங்களுக்குச் செவிசாய்த்து பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை இன்று எதிர்கொள்ளும் மிக மோசமான பொருளாதார,அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு, நவீன இலங்கையை கட்டமைக்க மக்கள் கோரும் சமூக மாற்றத்திற்காக ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக மறுசீரமைப்புகளுக்கான தேசிய திட்டம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு, இந்த கருத்தாடலை மேலும் விரிவுபடுத்தும் முகமாக ஒன்றிணைந்த மறுசீரமைப்புகளுக்கான செயலகமொன்று இன்று (27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானவர்களின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. இதன் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment