ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது மத்திய வங்கியைக் கொள்ளையடித்த கோடீஸ்வரர் தம்மிக்க பெரேராவோ இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவார்கள் என்ற நம்பிக்கை யாருக்காவது இருந்தால் அது வேடிக்கையானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கோடீஸ்வரர் ஒருவர் அமைச்சுப் பதவியைப் பெற்றாலும், அவர் தனது பணத்தில் வாழ்வார் என்றும், நாட்டு மக்களின் நலனுக்காக அதனை ஒதுக்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “கடவுள் யானையின் வாலில் தொங்கியபடி உலகிற்குச் சென்றான்” என எவராலும் தனித்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்று தெரிவித்தார்.
எமது மனித வளம், எமது திறன்கள் மற்றும் புலம்பெயர் சிங்கள மற்றும் தமிழ் மக்களை ஒன்றிணைப்பதன் மூலமே நாட்டைக் காப்பாற்ற முடியும். அது இல்லாமல் ஒரு தனி மனிதனால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
“எமக்கு பிரதமர் பதவி வழங்கினால், நாங்கள் விரும்பிய அமைச்சர வையை நியமிக்க வாய்ப்பு வழங்கினால், ஆறு மாதங்களுக்குள் ஓரளவு ஸ்திரத்தன்மையை உருவாக்கி தேர்தலுக்குச் சென்று இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவோம். அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்
Be First to Comment