எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த எதிர்பார்க்கும் புதிய பேருந்துக்கட்டண அதிகரிப்பு தொடர்பான கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய பேருந்துக்கட்டண அதிகரிப்பு தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் நாளை பிற்பகல் கலந்துரையாடவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷசி வெல்கம எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அதன்படி, அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு அமைய புதிய பேருந்து கட்டணம் தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த கலந்துரையாடலுக்கு பேருந்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment